சென்னை: கடந்த வாரம் திரையரங்குகளில் தனுஷ் நடித்த இட்லி கடை மற்றும் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1 வெளியான நிலையில், இவ்வாரம் பல புதிய திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும் ஓடிடி தளங்களில் வெளியாகவிருக்கின்றன. அக்டோபர் 13 முதல் 19 வரை வெளிவரவுள்ள படங்களின் பட்டியல் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. த்ரில்லர், காதல், கற்பனை, அனிமேஷன் என பல்வேறு வகை படங்கள் இந்த வாரம் ரசிகர்களை கவரவிருக்கின்றன.

முதலில் Vishwas: A Mysterious Journey என்ற மர்ம த்ரில்லர் ZEE5 தளத்தில் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஒரு இளம் பெண் காணாமல் போன வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் விஸ்வாஸ், அதில் மறைந்திருக்கும் விபச்சார கும்பலின் ரகசியங்களை கண்டுபிடிக்கிறார். அதேபோல், Friendship Clash எனும் ரொமான்டிக் டிராமா Amazon Prime Video-வில் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகிறது. காதலின் ஏற்றத் தாழ்வுகளை நகைச்சுவையுடன் சொல்லும் மூன்றாவது பாகம் இது.
Netflix தளத்தில் இரண்டு முக்கிய வெளியீடுகள் ரசிகர்களுக்காக காத்திருக்கின்றன. The Diplomat Season 3 அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகும். புதிய அமெரிக்க ஜனாதிபதி கிரேஸ் பென் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தும் அரசியல் த்ரில்லர் இது. அதேபோல், குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் The Twits அதே நாளில் வெளியாகிறது. கேளிக்கை பூங்கா நடத்தும் ஒரு விசித்திர தம்பதியரும், அவர்களை எதிர்கொள்ளும் இரண்டு குழந்தைகளும் மந்திர விலங்குகளும் சேர்ந்த நகைச்சுவை கதை இது.
இந்நாளில் How to Train Your Dragon மற்றும் Final Destination 6: Bloodlines ஆகிய இரண்டு பிரபல படங்களும் JioHotstar தளத்தில் வெளியாகின்றன. டிராகன்களுடன் நட்பை விவரிக்கும் ஹாலிவுட் கிளாசிக் திரைப்படமும், திகில் ரசிகர்களுக்கான பிரபல தொடரின் புதிய பாகமும் இதுவாகும். இவ்வாரம் ஓடிடியில் வெளிவரும் படங்களும் வெப் சீரிஸ்களும் அனைத்துவிதமான ரசனை கொண்ட பார்வையாளர்களுக்கும் சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கவிருக்கின்றன.