இந்தியாவிலேயே அதிக வசூல் செய்த படம் ‘புஷ்பா 2’. 1,800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. ஆனால், படத்தின் கதை இன்னும் முடிவடையவில்லை. இதனால் ‘புஷ்பா 3’ எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது இதற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் ரவி பதில் அளித்துள்ளார். ‘புஷ்பா 3’ குறித்த கேள்விக்கு, “அடுத்து அட்லீ மற்றும் திரிவிக்ரம் படங்களில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளார்.

இந்த இரண்டு படங்களையும் முடிக்க இரண்டு வருடங்கள் ஆகும். அடுத்து ராம் சரண் நடிக்கும் படத்தையும் சுகுமார் இயக்கவுள்ளார். இருவரும் தங்கள் படங்களை முடிக்க 2028 ஆகும். எனவே, 2028-ல் ‘புஷ்பா 3’ தொடங்கும்’’ என்றார் தயாரிப்பாளர் ரவி.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ள படங்கள் ‘புஷ்பா’ மற்றும் ‘புஷ்பா 2’. இரண்டுமே பெரும் வரவேற்பை பெற்றதால் 3-ம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.