தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், சினிமாவை விட்டு விலக முடிவெடுத்துள்ளதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறு வயதில் தன்னை அம்மா புஷ் செய்ததால் கேமரா முன்பு நடிக்க தொடங்கியதாக கூறிய நித்யா, சினிமா தனக்கு பிடிக்காத துறையாகவே இருந்ததாக வெளிப்படையாக கூறியுள்ளார்.சில வருடங்களாகவே சினிமாவை விட்டு விலக வேண்டிய எண்ணம் இருந்ததாகவும், தற்போதுதான் அதற்கான முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார்.
தனிப்பட்ட சுதந்திரத்தை இழந்த அனுபவம், இயல்பான வாழ்க்கைக்கு கிடைத்த தடைகள் போன்றவை சினிமாவை வெறுக்க காரணமாக அவர் கூறியுள்ளார்.திருச்சிற்றம்பலம் படத்துக்காக தேசிய விருது பெற்றதற்குப் பிறகே நடிப்பை மீண்டும் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அதை கடவுளின் லஞ்சமாகவே கருதுவதாக நித்யா கூறினார்.
வேறுவித துறைகளில் ஆர்வம் கொண்டிருந்த அவர், வைல்டு லைஃப் போட்டோகிராஃபராக செயல்பட வேண்டும் என்பதையே கனவாக கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இதே நேரத்தில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள “காதலிக்க நேரமில்லை” படத்தின் முக்கியமான காட்சிகள் தனது இதயத்திற்குப் பிடித்ததாக கூறியுள்ளார். ஜெயம் ரவியுடன் நடித்த காட்சிகள் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் என நித்யா நம்பிக்கை தெரிவித்தார்.சினிமாவை விட்டு விலகும் முடிவின் பின்னணி, அவரது கருத்துக்கள், மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஆகியவை தற்போதைய பேச்சுப்பொருளாக மாறியுள்ளன.