சென்னை: நடிகர் அஜித், ‘துணிவு’ படத்தைத் தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வந்தார். ‘மங்காத்தா’ படத்திற்குப் பிறகு அஜித் – த்ரிஷா கூட்டணியில் உருவாகும் படம் இது. அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
படத்தை பிப்ரவரி 6-ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், படத்தின் விநியோக உரிமையைப் பெற்றுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் விடமுயற்சி படத்தை 800 திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் மகிழ்திருமேனி பேசும்போது, பந்தயம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு அஜித் ஒரு வார்த்தை கூறினார்.

‘பந்தயத்துக்குச் செல்வதற்கு முன் எனது படப் பணிகளை முடிக்க வேண்டும். “பந்தயத்தில் எனக்கு எதுவும் ஆகலாம், காரின் ஆக்சிலேட்டரை அழுத்தும் போது 100 சதவீதம் அழுத்த வேண்டும், 90 சதவீதம் அழுத்தி விளையாட விரும்பவில்லை. இந்த வேலை இருக்கிறது, அந்த வேலை என்று நினைக்கக் கூடாது என்றார். அதைக் கேட்டதும் எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது என்றார் இயக்குநர். அவர் பேசும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.