சென்னை: ஓஹோ எந்தன் பேபி படத்தின் டிரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் மிகவும் கலர்ஃபுல்லாக, நகைச்சுவையாக உருவாகியுள்ளது. திரைப்படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்க கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். இவர்களுடன் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.
படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் உதவி இயக்குனராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குனராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார்.தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்காக சொல்லப்பட்டுள்ளது.
திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா நேற்று நடைப்பெற்றது. அதில் திரைப்பிரபலங்களான கார்த்தி, வெற்றி மாறன், அஷ்வத் மாரிமுத்து, ஏ.ஜி.எஸ் அர்ச்சனா மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.படத்தின் டிரெய்லரை நடிகர் சிம்பு அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.
டிரெய்லர் காட்சிகள் மிகவும் கலர்ஃபுல்லாக, நகைச்சுவையாக உருவாகியுள்ளது. திரைப்படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.