சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் 21-வது பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. இந்தக் கூட்டத்தில், காரைக்குடி நாராயணன் அவர்களை 203 கதைகளைப் பதிவு செய்த சாதனைக்கான பாராட்டு விழா நடத்தப்பட்டது . அவருக்கு சங்கத்தின் சார்பில் மோதிரம் அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
இந்தச் சங்கத்தில், இயக்குநர் கே.பாக்யராஜ் மூன்றாவது முறையாக தலைவராக நியமிக்கப்பட்டார். சங்கத்தின் துணைத் தலைவராக கண்ணன் மற்றும் ரவிமரியா ஆகியோர் உள்ளனர். செயலாளராக லியாகத் அலிகான், பொருளாளராக பாலசேகரன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
பொதுக்குழுவில், தற்போதைய நிர்வாகிகள் 2026ம் ஆண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடப்பது குறித்து பெப்சி விதிமுறைகளைப் பின்பற்றுவதாகவும், செப்டம்பர் மாதத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
ரவி மரியாவுடன் பேசியபோது, பொதுக்குழுவில் உறுப்பினர்கள், தற்போதைய நிர்வாகத்தைப் தொடரவேண்டும் என விவாதித்து, அதைத் தான் அங்கீகரித்தனர். அவர், பொதுக்குழுவில் உள்ளவர்கள், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து செயல்படுகிறோம் என்று தெரிவித்தார்.
துணைத் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரவிமரியா, தனது வரவிருக்கும் பணிகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்தார். ‘தேசிங்கு ராஜா 2’ படத்தில் முக்கியமான காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், மேலும் சில படங்களின் பணிகள் கைவசம் உள்ளதாகவும் கூறினார்.