ஹைதராபாத் :சொகுசு கார் பரிசாக வழங்கல்… நடிகர் பவன் கல்யாண் இயக்குநர் சுஜித்துக்கு சொகுசு கார் பரிசளித்துள்ளார்.
ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் – இயக்குநர் சுஜித் கூட்டணியில் உருவான ’தே கால் ஹிம் ஓஜி’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன் பிரம்மாண்டமாக வெளியானது.
அதிரடி ஆக்சன் காட்சிகள், காட்சிகளை உருவாக்கிய விதம் என சில விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், இப்படம் உலகளவில் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இப்படத்தின் வெற்றியை முன்னிட்டு நடிகர் பவன் கல்யாண் இயக்குநர் சுஜித்துக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். நீண்ட காலம் கழித்து பவன் கல்யாணுக்கு கிடைத்த வெற்றி என்பதால் தன் இயக்குநருக்கு கார் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்