2024-ம் ஆண்டு வெளியான பிருத்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது. அதில் சிறப்பாக நடித்ததற்காக பிருத்விராஜுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் அதைப் பெறாதபோது சர்ச்சை எழுந்தது. விருது பெறாதது குறித்து பிருத்விராஜிடம் கேட்டபோது, ”10 பேர் அமர்ந்து ஒரு படத்தைப் பார்த்து மதிப்பீடு செய்வதற்காகவோ அல்லது ஒரு நடுவர் குழு ஒரு படத்தை முடிவு செய்வதற்காகவோ படங்கள் தயாரிக்கப்படுவதில்லை.

அவை மக்களுக்காகவே தயாரிக்கப்படுகின்றன. டிக்கெட் வாங்குபவர்களுக்காகவும், திரையரங்குகளுக்கு வந்து அந்த அனுபவத்தை உணருபவர்களுக்காகவும் அவை தயாரிக்கப்படுகின்றன.
அந்த வகையில், ‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு மக்கள் ஏற்கனவே ஒரு பெரிய விருதை வழங்கியுள்ளனர்” என்றார்.