சென்னை: நடிகர், இயக்குனர், டான்ஸ்மாஸ்டர் என்று பன்முக திறமை கொண்ட பிரபு தேவாவின் முதல் லைவ் டான்ஸ் ஸோ நடக்கிறது தெரியுங்களா?
நடனப்புயல் பிரபுதேவா முதல்முறையாக லைவ் டான்ஸ் ஸோவில் பங்கேற்கிறார். தமிழ் சினிமா நடிகர்களில் முன்னணியில் இருக்கும் பிரபுதேவா, டான்ஸ் உலகின் முடிசூடா மன்னன் என்றால் மிகையில்லை.
அவர் ஆட்டத்தை காணவும், ரசிக்கவும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், பிப்ரவரி 22ஆம் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் லைவ் நிகழ்ச்சியில் அவர் நடனமாட உள்ளார். இதனால் அவரை நேரில் காணும் குஷியில் ரசிகர்கள் உள்ளனர்.