நஸ்லன், மமிதா பைஜு, ஷியாம் மோகன் மற்றும் பலர் நடித்துள்ள மலையாளப் படம் ‘பிரேமலு’. இதை ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த குறைந்த பட்ஜெட் காதல் நகைச்சுவைத் திரைப்படம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகி ரூ. 130 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
தமிழ், தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றது. 2-ம் பாகம் தயாரிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான திலீஷ் போத்தன், “பிரேமலு 2 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்துவிட்டன. ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது இது பிரமாண்டமாக இருக்கும்” என்றார்.