கார்த்தி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் கைதி 2 படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். பல ஆண்டுகளாக தள்ளிப்போன இப்படம் இடையில் கைவிடப்பட்டுவிட்டதா என்ற வதந்திகளும் பரவின. ஆனால் தற்போது தயாரிப்பு நிறுவனம் மற்றும் லோகேஷ் கனகராஜ் இடையே ஏற்பட்டுள்ள பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கைதி 2 விரைவில் துவங்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

இப்படம் தொடர்பான முக்கிய பிரச்சனையாக இருந்தது லோகேஷ் கனகராஜின் சம்பள விவகாரமும், பட்ஜெட்டும் தான். இதனை தயாரிப்பு நிறுவனம் சம்மதித்திருப்பதால் எந்த தடையும் இன்றி கைதி 2 தொடங்கும் என சொல்லப்படுகிறது. இருப்பினும், லோகேஷ் அடுத்ததாக ரஜினி-கமல் படத்தை இயக்குவாரா அல்லது கைதி 2 க்கு முன்னுரிமை தருவாரா என்பது இன்னும் வெளிச்சம் பார்க்கவில்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே கைதி 2 படம் தள்ளிக்கொண்டே செல்வதால், இந்த முறை மீண்டும் தாமதமாகுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் நிலவுகிறது. அதேசமயம், தற்போது ரஜினி-கமல் இணையும் படத்திற்கான கதை விவாதத்தில் லோகேஷ் பிஸியாக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. எனினும் இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை.
லோகேஷின் கடைசி படம் கூலி பெரிய எதிர்பார்ப்பை சந்தித்தும், கடுமையான விமர்சனங்களை பெற்றது. அந்த விமர்சனங்களுக்கு சரியான பதிலடி கைதி 2 மூலமாகவே கிடைக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். இப்படம் துவங்கியவுடன் லோகேஷ் கனகராஜ் மீண்டும் தனது பழைய வெற்றி பாதைக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.