லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் “பென்ஸ்” திரைப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன், இப்போது லாரன்ஸை ஹீரோவாக கொண்டு இப்படத்தை இயக்கி வருகிறார். நிவின் பாலி வில்லனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து, இந்த படம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

ப்ரேமம் உள்ளிட்ட படங்களில் லவ்வர் பாய் என பெயர் பெற்ற நிவின் பாலி, இப்போது மிரட்டும் வில்லன் வேடத்தில் நடிப்பது தான் ரசிகர்களுக்கு புதிய சுவாரஸ்யம். இதேபோல், இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் வெளியிட்ட தகவலின்படி, இப்படத்தில் மேலும் ஒரு முன்னணி நடிகரும் நடிக்கவுள்ளார். அவரது பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றாலும், அது ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
இந்த புதுமுக நடிகர் தமிழ் நடிகரா அல்லது மற்ற மொழி நடிகரா என ரசிகர்கள் ஆராய்ந்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளனர். சமீபத்தில் ‘வாத்தி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த சம்யுக்தா மேனன், இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, லியோ படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த மடோனா செபாஸ்டியன் ‘பென்ஸ்’ படத்திலும் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம், பென்ஸ் படம் LCU (Lokesh Cinematic Universe) உடன் தொடர்புடையதா என்ற கூற்றுகள் மேலும் வலுப்பெற்றுள்ளன. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் ராகவா லாரன்ஸை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாலும், அவர் வேறு படத்தில் கமிட்டாக இருந்த காரணத்தால் அது நடக்கவில்லை. ஆனால் இப்போது, அவரின் கதையில் உருவாகும் ‘பென்ஸ்’ படத்தில் லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்போது சென்னையில் நடந்த படப்பிடிப்பு முடிவடைந்து, படக்குழு ராஜஸ்தான் உள்ளிட்ட நகரங்களுக்கு இடம் மாறியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருவதால், வெளியீட்டு தேதியையும் விரைவில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பென்ஸ்’ திரைப்படம் கதை, நடிகர்கள், மற்றும் தயாரிப்பு தரம் மூலமாகவே ஒரு பெரிய ஹைப்பை உருவாக்கி, லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில் கலக்கும் படம் ஆகும் என நம்பப்படுகிறது.