சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, பொது செயலாளர் விஷால், துணை தலைவர்கள் பூச்சிமுருகன், கருணாஸ், உறுப்பினர்கள் லதா சேதுபதி, சோனியா, பசுபதி, ராஜேஷ், கோவை சரளா, ஸ்ரீமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் டெல்லி கணேஷ், சி.ஆர்.விஜயகுமாரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. காத்தாடி ராமமூர்த்தி, பசி சத்யா, அககு, எஸ்.சி.கலாவதி, எம்.கலாவதி உள்ளிட்ட 10 மூத்த கலைஞர்களுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதும், முகம் பொறித்த தங்க டாலரும் வழங்கப்பட்டது.
முத்துக்கள் படித்து 3 பட்டங்கள் பெற்றதற்காக தங்க டாலரும் வழங்கப்பட்டது. பொதுக்குழுவில் நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகள் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் நடிகர் கார்த்தி கூறியதாவது:-
சங்க கட்டிடம் கட்ட ஜனவரி மாதம்தான் வங்கி கடன் கிடைத்தது. நாங்கள் ரூ.30 கோடி கேட்டோம், அதில் 50 சதவீதம் டெபாசிட்டாக கேட்டனர். அப்போது எனக்கு ரூ.25 கோடி கடன் கிடைத்தது.
மே மாதம் வேலையை மீண்டும் தொடங்குகிறோம். 5 ஆண்டுகள் காலதாமதம் ஆனதால், முன்பு பணிபுரிந்த பொறியாளர்கள், கட்டிடக் கலைஞர்களை திரும்ப அழைத்து வருவதில் சிரமம் ஏற்பட்டது.
வங்கியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கணக்கு வழக்குகளை பார்த்துவிட்டு பணியை மீண்டும் தொடங்கியுள்ளோம். கடந்த 3 மாதங்களாக பணிகள் வேகமாக நடந்து வருகிறது. நவம்பர் மழைக்கு முன் வெளிப்புறக் கட்டமைப்பை முடிக்க வேண்டும்.
மார்ச் மாதத்துக்குள் முழுப் பணிகளையும் முடித்துவிடுவோம் என்று கூறியுள்ளனர். சங்கத்தின் கடனை அடைக்கும் வகையில், நிகழ்ச்சிகள் நடத்த உள்ளோம். மக்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ரஜினிசார் ஐடியா கொடுத்துள்ளார்.
நான் மேடையில் நடிக்கிறேன் என்றும் கூறினார். அதேபோல கமல் சார் சேர்ந்து செய்வேன் என்று கூறியிருப்பதும் பரபரப்பானது. பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக ரோகினி தலைமையில் கமிட்டி அமைத்துள்ளோம்.
பிரச்சனைகளைப் புகாரளிக்க பெண் உறுப்பினர்களுக்கு தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் அனுப்பப்படும். இவ்வாறு கார்த்தி பேசினார்.