இயக்குனர் லிங்குசாமி தனது தயாரிப்பான ‘உத்தம வில்லன்’ படத்தின் தோல்வியால் ஏற்பட்ட பிரச்சனைகளை சரி செய்து வருகிறார். இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இடம் பொருள் ஏவல்’ இன்னும் வெளியாகவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக பிவிபி நிறுவனத்திற்கும், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கும் இடையே வழக்கு இருந்தது. பிவிபி நிறுவனத்திடம் வாங்கிய பணத்திற்கான காசோலை பவுன்ஸ் ஆனதை அடுத்து திருப்பதி பிரதர்ஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பில் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனையை சைதாப்பேட்டை நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து லிங்குசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கும் இந்த தீர்ப்பை உறுதி செய்தனர்.
இந்த தீர்ப்பின் போது ரஜினி தன்னை தொடர்பு கொண்டதை லிங்குசாமி அன்புடன் குறிப்பிட்டுள்ளார். அதில், “சமீபத்தில் ஒரு வழக்கு தொடர்பாக கோர்ட்டில் தீர்ப்பு வந்தது. அப்போது ரஜினி சார் போனில் அழைத்தார். “நான் ஏதாவது செய்யட்டுமா? என்ன விவரம் அதை முடித்துவிடுவோமா? எவ்வளவு இருக்கும் என்று கேட்டார்.
பரவாயில்லை சார், நான் பார்த்துக் கொள்கிறேன் என்றேன். ரஜினி சார் இப்படி ஒரு வார்த்தை கேட்பார் என்று எதிர்பார்க்கவே இல்லை. விசாரிப்பதில் தவறில்லை, ஆனால் அது என்னவென்று சொல்வது மிகப் பெரிய விஷயம், அதை நாங்கள் உங்களுக்குத் தருகிறோம்,” என்றார்.