சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம், ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பான் இந்திய படமாக திரையரங்குகளில் வெளியானது. வெளியான தருணமே ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சன் பிக்சர்ஸ் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்த இந்த படத்தில் சத்யராஜ், ஷ்ருதி ஹாசன், நாகார்ஜூனா, உபேந்திரா, ஆமிர் கான், ஷௌபின், ரச்சிதா ராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலில் சாதனை படைத்தது. முதல் நாளே உலகளவில் 152 கோடி ரூபாய் வசூலித்து, தமிழில் அதிக வசூல் செய்த படமாக புதிய சாதனையை படைத்தது. தொடர்ந்து நான்கு நாட்களில் 404 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியது. ரசிகர்கள் விமர்சனங்களை புறந்தள்ளியும், படம் வணிக ரீதியாக பெரும் வெற்றியை கண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கூலி ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வந்திருந்தது. அதன்படி, செப்டம்பர் 11ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு Prime Videoவில் படம் வெளியாகிறது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் மட்டுமே பார்க்க முடியும். ஹிந்தி பதிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
ரஜினி ரசிகர்களுக்கு இது பெரிய கொண்டாட்ட தருணமாக உள்ளது. திரையரங்குகளில் பார்த்த மகிழ்ச்சியை மீண்டும் வீட்டிலேயே அனுபவிக்க ஆவலுடன் உள்ளனர். கூலி திரைப்படம் திரையரங்குகளிலும் ஓடிடியிலும் ரசிகர்களுக்கு ஒரு இரட்டை கொண்டாட்டமாக மாறியுள்ளது.