ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமாரின் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக உள்ளது. ஒவ்வொரு படத்தையும் முடித்த பிறகு, அவர் இமயமலைக்குச் சென்று ஓய்வெடுப்பது வழக்கம். ‘வேட்டையன்’ படம் வெளியாவதற்கு முன்பு அக்டோபர் மாதம் அவர் கடைசியாக இமயமலைக்குச் சென்றார்.
‘கூலி’ படம் வெளியாவதற்கு முன்பு இமயமலையில் பெய்த கனமழை காரணமாக அவர் அங்கு செல்லவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு வார பயணமாக இமயமலைக்குச் சென்றார்.

ரிஷிகேஷுக்குச் சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள ஆசிரமத்தில் தங்கினார். நேற்று காலை, கர்ணபிரயாகைக்கு சென்றார். அங்கு செல்லும் வழியில், அங்குள்ள பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு சாலையோரக் கடையில் தனது நண்பர்களுடன் காலை உணவை சாப்பிட்டார்.
வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு நின்று சாப்பிடும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இன்று அவர் பத்ரிநாத் கோயிலுக்குச் செல்கிறார்.