சென்னை: ரஜினிகாந்திற்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று நடிகர் விஷால் உறுதி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் அவர் காதலித்து வந்த நடிகை தன்ஷிகா இருவருக்கும் இன்று அவர்களது இல்லத்தில் இரு வீட்டார் முன்னிலையில் திருமண நிச்சயம் நடந்தது.
சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ” சினிமாவில் 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக இருப்பது உலக சாதனை, ரஜினிகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும்” என கூறியுள்ளார்.
நடிகர் ரஜினி நடிப்பில் இயக்குன் லோகேஷ் இயக்கத்தில் உருவான கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் உலகளவில் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. திரைப்படம் இதுவரை 500 கோடியை கடந்துள்ளது.