சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ₹151 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த காலத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் தமிழ் சினிமாவில் முதல் நாளில் மிகப்பெரிய ஓபனிங் சாதனையை படைத்தது. அந்த சாதனையை தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 75 வயதிலும் முறியடித்து அசால்ட்டு காட்டியுள்ளார்.

கூலி திரைப்படம் சுமார் 5000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்தியா மற்றும் பல வெளிநாடுகளிலும் வெளியானது. முதல் நாளுக்கான டிக்கெட் பிரஷர் அதிகம் இருந்த நிலையில், வசூல் சாதனை விண்ணை முட்டியுள்ளது.
கூலி அதிகாரப்பூர்வ வசூல்:
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ கூட முதல் நாளில் ₹100 கோடி வசூலை எட்டாத நிலையில், ‘கூலி’ திரைப்படத்தின் உலகளவில் ₹151 கோடி வசூல் சாதனையை எட்டியுள்ளது. இந்தியாவில் மட்டும் ₹65 கோடி வசூல் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓவர்சீஸ் மார்க்கெட்டிலும் ரஜினிகாந்த் தனது உச்சத்தை நிரூபித்துள்ளார்.
லியோ வசூல் முறியடிப்பு:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘லியோ’ திரைப்படம் முதல் நாளில் ₹148 கோடி வசூலை ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்தது. அந்த சாதனையை ‘கூலி’ முறியடித்து தமிழ் சினிமாவின் புதிய பெஞ்ச்மார்க் படமாக மாறியுள்ளது.
பாக்ஸ் ஆபீஸ் எதிர்பார்ப்புகள்:
‘கூலி’ படம் முதல் 4 நாட்களில் ஹவுஸ்ஃபுல் ஓடும் பட்சத்தில், முதல் வார முடிவில் ₹400 கோடி வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2வது வாரமும் இதே வேகத்தில் ஓடினால், ₹700 முதல் ₹800 கோடி வரை வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர். 1000 கோடி வசூலை எட்டுமா என்பது கவனிக்கத்தக்கது.
75 வயதிலும் பாக்ஸ் ஆபீஸ் பாட்ஷா:
ரஜினிகாந்த் 75 வயதிலும் தான் பாக்ஸ் ஆபீஸ் பாட்ஷா என்பதை நிரூபித்துள்ளார். ‘கூலி’ படத்தை கலவையான விமர்சனங்கள் வந்தாலும், வசூலில் அசால்ட்டாக செயல்பட்டு வருகிறது.