சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி நடிகராக மட்டுமல்ல, மனிதராகவும் அவர் எவ்வளவு உயர்ந்தவர் என்பதை தயாரிப்பாளர் பாலாஜி பிரபு உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். King Voice என்ற யூடூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ரஜினியின் பழைய கால அனுபவங்கள் மற்றும் அவரின் எளிமையான வாழ்வியல் பற்றியும் பேசினார்.

அரம்பக் காலங்களில் ரஜினி ஒரு ஸ்கூட்டரில்தான் வருவார். “எனக்கு தேவை ஒரு ஸ்கூட்டர், அதுக்கு பெட்ரோல், ஒரு சிகரெட் பாக்கெட், இரண்டு டீ… போதும்” என்று எளிமையாக அவர் கூறுவாராம். இந்த எளிமையும், தன்னடக்கமும் இன்று 74 வயதிலும் அவர் மீது காணப்படுவதைப் பார்க்கும் போது அவர் உண்மையான சூப்பர் ஸ்டார் என அவர் பாராட்டினார்.
பாலாஜி பிரபு மேலும் தெரிவித்ததாவது, ஜெமினி ஸ்டுடியோ அருகே ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ரஜினிக்கு கிண்டலால் தோன்றியதென கூறினார். ஒரு நாள் ஷூட்டிங்குக்கு லேட்டாக வந்ததற்காக, ‘இந்த ஏரியாவிலேயே வீடு வாங்கிவிட்டால் நேரத்துக்கு வரலாமே’ என ஒருவர் கிண்டல் செய்தராம். அதை மனதில் பதிந்து வைத்து, சில ஆண்டுகளுக்கு பிறகு அதே இடத்தில் கட்டிடம் ஒன்றை வாங்கி அந்த கனவையும் சாத்தியமாக்கியுள்ளார்.
அதேபோல், தனது தொடக்கக் காலத்தில் ‘16 வயதினிலே’ படத்துக்குப் பிறகு ஒரு படத்தில் நடிக்க அழைக்கப்பட்ட ரஜினி, அட்வான்ஸ் கேட்க, தயாரிப்பாளர் கிண்டலாக “நீ பெரிய நடிகனா?” என கேட்ட சம்பவமும் கூறப்பட்டு உள்ளது. அதன்பின் நடந்தே வீட்டுக்குச் சென்ற ரஜினி, ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு ஒருநாள் ஃபாரின் காரில் வரவேண்டும் என்று முடிவு செய்ததாக அவர் கூறியிருக்கிறார். பின்னர் அதையே செய்தும் காட்டினார்.
இவை எல்லாமே ரஜினியின் உழைப்பு, பொறுமை மற்றும் உறுதியின் சான்றுகள். இன்று மிகப்பெரிய சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பது, மக்களின் அன்பை பெற்றவர் என்ற அந்தஸ்துக்கு ஏற்கெனவே பல அடிச்சுவடுகளை அவர் பதித்து வைத்திருந்தார்.