சென்னை; ஆல்யா மானசா நடிக்கும் புதிய தொடரில் நாயகனாக ரக்ஷித் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடன கலைஞராக தொலைக்காட்சியில் அறிமுகமானவர் விஜய் டிவி பக்கம் ராஜா ராணி தொடரில் நாயகியாக நடித்தார். அதில் இருந்து அவரது வாழ்க்கையே மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும்.
கடைசியாக ஆல்யா மானசா சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இனியா தொடரில் நாயகியாக நடித்து வந்தார், ஆனால் தொடர் சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது.
மே மாதம் ஆல்யா மானசா தனது பிறந்தநாள் ஸ்பெஷலாக ஜீ தமிழில் தான் புதிய சீரியல் நடிப்பதாக அறிவித்தார். சமீபத்தில் பூஜை போட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்த நிலையில் சீரியல் நாயகன் குறித்த தகவல் வந்துள்ளது.
இந்த சீரியலில் நாயகனாக ரக்ஷித் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது, ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.