பாலிவுட் இயக்குனர் நித்தேஷ் திவாரி இயக்கிய, ராமாயணம் தொடர்பான மூன்று பாகங்கள் கொண்ட இப்படத்தில் ராமனாக ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதாவாகவும், கேஜிஎஃப் புகழ் யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ராகுல் ப்ரீத் சிங் சூர்ப்பனகையாகவும், லாரா தத்தா கைகேயியாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
இந்தப் படத்தை முதலில் அல்லு மன்டேனா மீடியா வென்ச்சர்ஸ் எல்எல்பி மற்றும் அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் மற்றும் நமித் மல்ஹோத்ரா இணைந்து தயாரித்தனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக, பின்னர் நமீத் மல்ஹோத்ராவை யசோத்துடன் இணைந்து தயாரித்தனர்.
இந்நிலையில் இந்த படத்திற்காக மும்பை ஸ்டுடியோவில் 11 பிரமாண்ட செட்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த செட்கள் அனைத்தும் 3டியில் வடிவமைக்கப்பட்டு அதன் பிறகு படப்பிடிப்பு அங்கு நடைபெறும். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று தெரிகிறது.