இந்தி திரைப்பட இயக்குனர் நிதேஷ் திவாரி ராமாயணக் கதையை திரைப்படமாக இயக்குகிறார். இந்த 2 பாகப் படத்தில், ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடிக்கவுள்ளனர். சன்னி தியோல் அனுமனாக நடிக்கவுள்ளார்.
காஜல் அகர்வால் ராவணனின் மனைவி மண்டோதரியாகவும் நடிக்கவுள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்படும். இந்தப் பிரமாண்டமான படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது. முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியிடப்படும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பின் கடைசி நாளில், ரன்பீர் கபூர் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.
ராமராக நடிப்பது தனது நடிப்பு வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்று கூறிய ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷின் கதாபாத்திரங்களைப் பாராட்டி நன்றி தெரிவித்தார். படத்தின் முதல் பார்வை வீடியோ நாளை வெளியிடப்படும்.