இந்தி பட இயக்குனர் நித்தேஷ் திவாரி ராமாயண கதையை படமாக்குகிறார். இந்த பிரமாண்ட படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக ‘கேஜிஎஃப்’ யாஷ் நடிக்கின்றனர். நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து நடிகர் யாஷினின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இந்நிலையில், ஜெட்டாவில் நடந்த செங்கடல் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ரன்பீர் கபூரிடம் ‘ராமாயணம்’ படம் குறித்து கேட்கப்பட்டது. அவர் பேசுகையில், “இந்தப் படம் 2 பாகங்களாக உருவாகிறது. முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விரைவில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளோம். ராமாயணம் படத்தில் நடித்ததில் பெருமைப்படுகிறேன். ராமராக நடிப்பது எனக்கு கனவு போன்றது. இந்திய கலாசாரம் என்ன என்பதை இந்த படம் கற்றுத்தருகிறது. இந்த படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாக உள்ளது.