ராஷி கண்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அரண்மனை 4’ படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்து இந்தியில் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’, தெலுங்கில் ‘தெலுசு கடா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். 2014-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஊஹலு குசகுசலாடே’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதில் நாக சௌர்யா ஹீரோவாக நடித்திருந்தார். படம் வெளியாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு ராஷி கண்ணா அளித்த பேட்டியில், பிரபாஸுடன் நடிக்க விருப்பம் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “மகேஷ் பாபுவுடன் நடிக்கும் ஆசையை பலமுறை தெரிவித்துள்ளேன். எங்கள் ஆன்-ஸ்கிரீன் ஜோடி சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அடுத்து பிரபாஸுடன் நடிக்கும் ஆசையும் இருக்கிறது. அவருடைய ‘கல்கி 2898 கி.பி’ படத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். விக்ராந்த் மாஸியுடன் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தில் நடித்துள்ளேன்.
2002-ம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.