
நடிகை ராஷ்மிகா மந்தனா இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அவர் நடித்து வரும் ‘புஷ்பா 2’ திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாகத்திற்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்கிய ராஷ்மிகா, இரண்டாம் பாகத்துக்கு ரூ.10 கோடி வாங்கி தற்போது நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகி. ‘புஷ்பா 2’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இதுகுறித்து கேட்டபோது, மறுத்துள்ளார். “எனது சம்பளம் குறித்த செய்திகளில் உண்மை இல்லை. இது வதந்தி. படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இயக்குனர் சுகுமார் இருப்பதால், அவர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. ‘புஷ்பா’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்துக்காக எனக்கு விருது கிடைக்கும் என்று நம்புகிறேன்.