மும்பை: இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா அவரது ரசிகர்களால் ‘தேசிய க்ரஷ்’ என்று அழைக்கப்படுகிறார். தற்போது பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்து வருகிறார்.
இந்த சூழலில், அவர் ஒரு நேர்காணலில், ‘எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். அவளுக்கு 13 வயது. அவள் என்னை விட 16 வயது இளையவள். நான் அவளை மிகவும் நேசிக்கிறேன். அவள் செய்யும் குறும்புகளை நான் மிகவும் ரசிக்கிறேன்.

நான் தற்போது பல படங்களில் பிஸியாக இருப்பதால், அவளிடம் பேசக்கூட முடியவில்லை. 8 வருடங்களாக அவளைப் பார்க்க முடியவில்லை. ஒரு இடைவெளி எடுத்து அவளைப் பார்க்க விரும்புகிறேன்.
ஆனால் நான் ஒப்புக்கொண்ட வேலையின் காரணமாக, எதற்கும் நேரம் ஒதுக்க முடியவில்லை,’ என்று அவர் புலம்பினார்.