சுந்தர் சி இயக்கும் புதிய படத்திற்கான பேச்சுவார்த்தை ரவிதேஜாவிடம் நடந்து வருகிறது. ‘அரண்மனை 4’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பல்வேறு முன்னணி நடிகர்கள் சுந்தர்.சியிடம் கதை கேட்டு வருகின்றனர்.
தற்போது சுந்தர் சி ‘கேங்கர்ஸ்‘ படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் வடிவேலு, கத்ரின் தெரசா, பக்ஸ், முனீஸ்காந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதையடுத்து நயன்தாரா இயக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’.
வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு ரவிதேஜா நடிக்கும் தெலுங்கு படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார். இது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன.
அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முழுக்கதையையும் கேட்டு ரவிதேஜா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்கிறார்கள். இந்தக் கதையை முதலில் இங்குள்ள ஹீரோக்களிடம் சொல்லியிருக்கிறார் சுந்தர்.சி. யாரும் பெரிதாக ஆர்வம் காட்டாததால் தெலுங்கில் ரவி தேஜாவை வைத்து இயக்கும் பணியை தொடங்கியுள்ளார்.