சென்னை : வரும் 27ஆம் தேதி அருண் விஜய் நடித்த தடையற தாக்க படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் “தடையறத் தாக்க”. இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், ரகுல் ப்ரீத் சிங், வம்சி கிருஷ்ணா, அருள்தாஸ், காளி வெங்கட் உள்ளிட்டோர்நடித்திருந்தனர்.
தமன் இசையமைத்திருந்தார். 2012-ல் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இயக்குனர் மகிழ் திருமேனிக்கு இந்தப் படம் முக்கிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. வாழ்க்கையில் கஷ்டபட்டு ஒரு நல்ல நிலைக்கு முன்னேறிய இளைஞன், ஒரு சிறு உதவி செய்யபோக, மிகப்பெரிய ரவுடிகளின் கூட்டத்திடம் மாட்டிக் கொள்கிறான்.
அவன் அந்த ரவுடிகளிடமிருந்து தப்பினானா என்பது தான் இந்தப் படத்தின் கதை. திரில்லர் கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட இப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 4கே தரத்தில் மேம்படுத்தி இப்படத்தினை வெளியிட உள்ளனர். அதன்படி, இப்படம் வருகிற ஜூன் 27ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.