சென்னை : ரிலீஸ் ஆனபோது வசூல் செய்த தொகையை விட மூன்று மடங்கு ரீ ரிலீசில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது சனம் தேரி கசம் படம்.
ராதிகா ராவ் – வினய் சப்ரு இயக்கத்தில், ஹர்ஷவர்தன் ரானே மற்றும் மவ்ரா ஹோகனே அறிமுக நடிகர்களாக நடித்து 2016ம் ஆண்டு திரைக்கு வந்த ‘சனம் தேரி கசம்’ விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூலில் படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி ரீ-ரிலீஸ் ஆன இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 2016ல் வசூலித்த தொகையை விட மூன்று மடங்கு அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
ரசிகர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியாது என்பதற்கு இந்த படமும் ஒரு உதாரணமாக மாறியுள்ளது.