ஆர்.கே.சுரேஷ் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ஆர்.கே.சுரேஷ். இதில், அவர் ஒரு கொடூரமான வில்லனாக நடித்தார். அதன் பிறகு விஷாலின் ‘மருது’, ‘பில்லா பாண்டி’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’, ‘தலைவன் தலைவி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அவர் படங்களையும் தயாரித்து தற்போது இயக்குநராக அறிமுகமாகிறார். அவர் இயக்கும் படத்திற்கு ‘பிளைண்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை மாதவி சுரேஷ் ஸ்டுடியோ 9 புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார். விஜய் கிரண் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், வில்லியம் பிரான்சிஸ் இசையமைக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.