சென்னை: பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ருக்மணி விஜயகுமார், ஆனந்த தாண்டவம், கோச்சடையான், காற்று வெளியிடை, சீதா ராமம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமன்னா நடித்த ஆனந்த தாண்டவம் படத்தில் போட்டியாக நடித்தும், நடனத்தில் அசத்தியும் அவர் தனக்கென ரசிகர்களை பெற்றார்.
இப்போது 45 வயதை கடந்த நிலையில் கூட, ருக்மணி தனது ஃபிட்னஸால், நீச்சல் உடையிலான புகைப்படங்களாலும் மாலத்தீவில் எடுத்த வீடியோக்களாலும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடனத்துடன், யோகாவிலும் அதிக ஆர்வம் கொண்ட அவர், தற்போது விஜே பார்வதி போல வெளிநாடு சுற்றுலா பிசினஸையும் தொடங்கி உள்ளார்.
சமீபத்தில் மாலத்தீவின் திகுரா தீவு நோக்கி வரும் நவம்பரில் 7 நாள் ட்ரிப் ஒன்றை ரசிகர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் அழைத்துச் செல்லப் போவதாக அறிவித்துள்ளார். அதில் ஸ்கூபா டைவிங், யோகா, சாகச விளையாட்டுகள் போன்ற அனுபவங்களும் சேர்க்கப்பட்டிருக்கும். நீச்சல் தெரியாதவர்களுக்குக் கூட அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
திரைப்படங்களில் தொடர்ந்து அதிக வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும், நடனத்தில் திறமைசாலியாகவும், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாகவும் இருக்கும் ருக்மணி, தனது புதிய பிசினஸ்மூலம் ரசிகர்களுடன் தொடர்பைத் தொடர்ந்து வைத்திருக்கிறார். சினிமா மேடையிலிருந்து சுற்றுலா மேடைக்கு பயணம் செய்தாலும், ரசிகர்கள் அவரை இன்னமும் மறக்காமல் பின்தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.