கர்நாடகா: தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் மதராஸி படத்தில் நடிக்கும் ருக்மிணி, காந்தாரா படத்தில் கனகாவதியாக நடித்துள்ளாராம்.
தென்னிந்திய சினிமா என்றால் முதலில் தமிழ் சினிமா தான் பேசப்படும், அதன்பின் தெலுங்கு, மலையாள மொழி படங்கள் வர கடைசியில் தான் கன்னட சினிமா படங்கள் பேசப்படும்.
ஆனால் இப்போது கன்னட சினிமா KGF, காந்தாரா படங்கள் மூலம் மக்கள் அதிகம் கவனிக்கும் மொழியாக மாறிவிட்டது. கடந்த சில மாதங்களாக கன்னடத்தில் தயாராகும் காந்தாரா படம் குறித்து நிறைய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
காந்தாரா Chpater 1 வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிப்பு வந்துள்ள நிலையில் தற்போது படத்தில் நடிக்கும் நடிகையின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் மதராஸி படத்தில் நடிக்கும் ருக்மிணி காந்தாரா படத்தில் கனகாவதியாக நடித்துள்ளாராம்.