ஷாருக்கான், நயன்தாரா நடித்த ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானவர் இயக்குனர் அட்லீ. இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கைத் தயாரித்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில், இவர் சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாகவும், இந்தப் படத்தின் பட்ஜெட் 500 கோடி என்றும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த காலக்கட்ட படத்தில் நடிக்க ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதில் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தும் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், பட்ஜெட் காரணமாக இப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.