நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமொருவுடன் எடுத்த செல்ஃபி சமீபத்தில் இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பலர் ராஜ் நிடிமொருவின் மனைவி சியாமளி டேவை பற்றி பேச தொடங்கினர். இதற்கு பதிலாக சியாமளி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரி பகிர்ந்துள்ளார்.

அதில், “என்னை நினைத்த, பார்த்த, கேட்ட, பேசிய, எழுதிய அனைவருக்கும் ஆசிகள் மற்றும் அன்பு” என தெரிவித்துள்ளார். இதன் மூலம் சமந்தாவுடன் வந்த புகைப்பட விவகாரத்திற்கு அவர் மறைமுக பதில் அளித்துள்ளார் என மக்கள் கருதுகின்றனர்.இதனையடுத்து, ரசிகர்கள் சமந்தாவை விமர்சித்து, “ராஜ் திருமணமானவர், அவரிடம் நெருக்கம் காட்டாதீர்கள்” எனக் கூறியுள்ளனர்.
ஒருபுறம் சியாமளியின் அமைதியான பதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.முன்னதாக, காதலர் தினத்தன்று தனது கணவருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “இந்த முகமே பார்க்க விரும்புகிறேன், இந்த குரலையே கேட்க விரும்புகிறேன்” எனக் கூறி, கணவனிடம் உள்ள காதலை வெளிப்படுத்தியிருந்தார் சியாமளி.
சமந்தா மற்றும் ராஜ் நிடிமொருவின் நெருக்கம் குறித்து இணையவாசிகள் பல்வேறு கருப்புகளை வெளியிடுகிறார்கள். இது ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிலர், இது சாம்ராஜ் என புதிய பேயரையும் வைத்துள்ளனர்.தற்போது சியாமளியின் இன்ஸ்டா பதில் சிந்திக்கவைக்கும் வகையில் அமைந்துள்ளது. திருமண வாழ்க்கையின் மதிப்பையும், பொது அவதானிப்பில் வாழும் பிரபலங்களின் சிக்கலையும் இந்த நிகழ்வு காட்டுகிறது.