சென்னை: காதல் கணவர் நாக சைதன்யாவை பிரிந்த சமந்தாவின் வாழ்க்கையில் மீண்டும் காதல் வந்ததாக பேச்சு அடிபடுகிறது. இவரும் ஃபேமிலி மேன் மற்றும் சிட்டாடல் ஹனி பன்னி ஆகிய வெப் தொடரை இயக்கிய ராஜ் நிடிமோருவும் காதலிப்பதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். ராஜ் நிடிமோருக்கு ஏற்கனவே திருமணமானவர். அதனால், ‘அடுத்த பெண்ணின் கணவன் உனக்கு வேண்டாம் சம்மு. அது பாவம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.’ இந்நிலையில் ராஜும், சமந்தாவும் ஒன்றாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர்.

சமந்தா சுடிதார் அணிந்திருந்தார், ராஜ் வேட்டி சட்டை அணிந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. நடிகையாக திரையுலகில் நுழைந்த சமந்தா, ‘சுபம்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். ராஜ் மற்றும் சமந்தாவுடன் ‘சுபம்’ படக்குழுவினர் திருப்பதி கோவிலுக்கு சென்றனர்.
வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா, பங்காரம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தில் நடித்து தயாரித்து வருகிறார். சமந்தா தனது கேரியரில் பிஸியாக இருக்கும் நிலையில், அவரது காதல் வாழ்க்கை பற்றி அதிகம் பேசப்படுகிறது. ராஜும், சமந்தாவும் காதலிக்கிறார்கள் என்ற பேச்சு கிளம்பியபோது, ஹைதராபாத்தில் நடைபெற்ற பிகில் பால் போட்டியின் போது இருவரும் கைகோர்த்து நடப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலானது.