மும்பை: விக்கி கவுஷல், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஹிந்திப் படம் ‘சாவா’. இப்படம் உலகம் முழுவதும் ரூ.760 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.550 கோடி வசூலித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்த கதாநாயகியாக முதலில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருந்தார்.

ஆனால், இந்தப் படத்தை அவர் மறுத்துவிட்டார். காரணம் அப்போது அவர் ‘பேபி ஜான்’ என்ற ஹிந்திப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். ‘பேபி ஜான்’ படத்துக்காக ‘சாவா’ படத்தை கீர்த்தி நிராகரித்தார், ஏனெனில் இது அவரது நெருங்கிய நண்பரான அட்லி தயாரித்த படம்.
ஆனால், பேபி ஜான் படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. கீர்த்தியின் நிராகரிக்கப்பட்ட சாவா திரைப்படம் ரூ.760 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.