சென்னை: சீனு ராமசாமியின் `இடிமுழக்கம்’ படத்தின் செகண்ட் சிங்கிள் இன்று மாலை வெளியிடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘இடிமுழக்கம்’.
ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் 22-வது பூனே சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான கானா விளக்கு மயிலே பாடல் இன்று மாலை 6 மணிக்கு நடிகர் விஜய் சேதுபதி வெளியிடவுள்ளார்.
சீனு ராமசாமி கடைசியாக இயக்கிய கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்கிள் கொண்டாடப்பட்டு வருகிறது.