சென்னை: கலையுலக தாகத்தில் அனைத்து சிரமங்களையும் தோளில் சுமந்து வெற்றி என்னும் இலக்கை நோக்கி நடக்கும் மாடன் பட இயக்குநர் நம் வீட்டு பிள்ளை ஆர்.தங்கபாண்டியின் வாழ்வு ரசிகர்கள் கையில்தான் உள்ளது.
கலை உலக கனவு கலைந்த அப்பா, அண்ணா, புற்று நோயால் பாதிக்கப்பட்ட அம்மா, தங்கையின் திருமணக் கடன், என நெருக்கும் சூழலுடன் வாழ்க்கையுடன் போராடி, பிழைத்துக் கிடக்க, Rapido ஓட்டுநராக இயக்குநர் கனவுடன் திரிந்தவர்தான் “மாடன்” பட இயக்குநர் தம்பி ஆர். தங்கபாண்டி…
அம்மாவின் இறுதிச் சடங்கினை நடத்தவும் அடுத்தவர் உதவி தேவைப்பட்ட நிலை…கனவுகள் மட்டும் கலையாமல் பார்த்துக் கொண்டார். இவர் வாழ்க்கையையே படமாக எடுக்கலாம். இதோ, மார்ச் 14 ஆம் தேதி பாண்டியின் முதல் படம் வெளியாகிறது. பாடல் வெளியாகி உள்ளது.
இன்னும் 7 நாளில் படம் திரையில் வெளியீடப்படுகிறது. படம் பெரும் வரவேற்பை பெற்று வரும் 7 நாள் பாண்டியின் நல்வாழ்க்கையின் டிரெய்லர் அட்டகாசமாக மாறும் என்ற நம்பிக்கை, நல்ல படங்களுக்கு வரவேற்பை அளிக்கும் ரசிகர்கள் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதுதான். நல்ல படங்களுக்கு எப்போதும் வரவேற்பு கிடைக்கும் என்பதில் அபார நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது.
சாதித்த பின்பு ஒருவரை பேசுவதை விட, சாதிக்க போராடும் போதுதான் துணை நிற்க வேண்டும். வெற்றி இயக்குநராக கொண்டாடும் போது உடன் நிற்பதை விட, Rapido ஓட்டுநர் வெல்ல உதவிட வேண்டும். என்ன செய்யலாம்? நிச்சயம் இந்த படம் பெரும் வெற்றிப் பெற செய்வீர்கள் என்ற நம்பிக்கை அதிகம் உள்ளது. பேசும் படமாக
மாடன் படத்தின் இயக்குனரின் வாழ்க்கையின் முக்கியமான 7 நாட்கள், விழுந்தால், எழுந்திடும் பின்னணி கிடையாது. விழாமல் தடுத்திட முயல்வோம். துணை நிற்போம் அவருக்கு பக்கப்பலமாக.