திருவனந்தபுரம்: நடிகர் விக்ரம் நடித்த மஜா படத்தின் டைரக்டர் ஷாபி உடல் நலக்குறைவால் காலமானார்.
தமிழில் நடிகர் விக்ரம் நடித்த ‘மஜா’ படத்தை இயக்கிய டைரக்டரும், மலையாள சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவருமான ஷாபி உடல் நலக்குறைவால் கொச்சியில் காலமானார். மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஷாபி (56). கடந்த 2001ல் ஜெயராமை நாயகனாக வைத்து ‘ஒன் மேன் ஷோ’ என்ற படத்தை முதன்முதலாக இயக்கினார்.
இதன் பின்னர் ‘கல்யாணராமன்’, ‘மாயாவி’, ‘தொம்மனும் மக்களும்’, ‘புலிவால் கல்யாணம்’, ‘மேரிக்குண்டொரு குஞ்சாடு’, ‘சாக்லேட்’, ‘மேக்கப் மேன் சட்டம்பி நாடு’, ‘டூ கன்ட்ரீஸ்’ உள்பட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் பெரும்பாலான படங்கள் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டுகளாக ஓடியுள்ளன. தமிழில் விக்ரம் நடித்த ‘மஜா’ என்ற படத்தை ஷாபி இயக்கியுள்ளார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஷாபி காலமானார்.