மும்பை: நடிகர் ஷாருக்கான் நேற்று முன்தினம் தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடினார். ஒவ்வொரு பிறந்தநாளிலும் ரசிகர்களை சந்திப்பது வழக்கம். இதற்காக அவரது வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு ஷாருக்கானுக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள். இந்த வகையில் நேற்று மும்பையில் ஷாருக்கானின் ரசிகர் மன்றங்கள் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஷாருக்கான் கலந்து கொண்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். ரசிகர்கள் முன்னிலையில் பேசிய அவர், “ஒரு நல்ல விஷயத்தைச் சொல்கிறேன். நான் புகைபிடிப்பதை விட்டுவிட்டேன். புகைப்பிடிப்பதை விட்டுவிட்ட பிறகு சுவாசக் கோளாறுகள் வராது என்று நினைத்தேன். ஆனால் அந்த உணர்வு இன்னும் இருக்கிறது. கடவுள் நினைத்தால் விரைவில் சரி செய்யப்படும்” என்றார் ஷாருக்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அடுத்த பட புதுப்பிப்பை விட இது ஒரு சிறந்த அறிவிப்பு என்று ரசிகர் ஒருவர் வீடியோவில் கருத்து தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பேட்டியில், ஷாருக்கான் ஒரு நாளைக்கு 100 சிகரெட்டுகள் புகைப்பதாக கூறியிருந்தார்.
நாள் முழுவதும் சாப்பிடுவதில்லை, சிக்ஸ் பேக் சாப்பிட ப்ளாக் காபி தான் குடிப்பேன் என்றார். இந்நிலையில், தற்போது புகைப்பிடிப்பதை விட்டுவிட்டதாக அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.