‘அலைபாயுதே’ மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் மற்றும் ஷாலினி நடிப்பில் 2000-ம் ஆண்டு வெளியான படம். ஏ.ஆர். ரஹ்மான் இந்த மெகா ஹிட் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஷாருக்கான் மற்றும் கஜோலை முக்கிய வேடங்களில் வைத்து இயக்கப் போவதாக மணிரத்னம் கூறினார்.
இதுபற்றி சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பேசிய மணிரத்னம், “இந்த கதையை ஷாருக்கானிடம் சொன்னபோது அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் இந்த படத்தின் கிளைமாக்ஸ் சரியாக அமையவில்லை. அதனால் ‘அலைபாயுதே’ படத்துக்குப் பதிலாக தில்சே (உயிரே) படத்தை இயக்கினேன்.

அதன் பிறகுதான் ‘அலைபாயுதே’ கதையின் கிளைமாக்ஸ் கிடைத்தது. அதை இயக்குவதில் எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது,” என்றார். ‘அலைபாயுதே’ 2002-ம் ஆண்டு ஷாத் அலி இயக்கத்தில் ‘ஸாதீயா’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.