சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் வரும் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. இது குறித்து ஷங்கர் அளித்த பேட்டி:- மாற்றத்தை விரும்பும் நேர்மையான அரசு அதிகாரிக்கும், சக்திவாய்ந்த அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் இறுதி யுத்தம் தான் ‘கேம் சேஞ்சர்’.
கியாரா அத்வானிக்கு அழகு, இளமை மற்றும் திறமை உள்ளது. அற்புதமாக நடித்திருக்கிறார். ராம் சரணுக்கு போட்டியாக நடனமாடியுள்ளார். அஞ்சலியின் கேரக்டரில் ஆச்சரியமும் திருப்பமும் இருக்கிறது. எஸ்.ஜே. சூர்யா ஒவ்வொரு காட்சியிலும் அற்புதம். தனிப்பட்ட தாக்குதல்களை விமர்சிக்கக் கூடாது.
மற்றபடி ஒரு படத்தை ஒருவர் எவ்வளவு கடுமையாக விமர்சித்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். விமர்சனத்தை நிறுத்த முடியாது. நல்ல யோசனையாக இருந்தால் எடுத்து மாற்றலாம். இல்லை என்றால் கடந்து செல்ல வேண்டும். ‘இந்தியன் 2’ குறித்த விமர்சனங்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனது அடுத்த வேலையில் கவனம் செலுத்துகிறேன்.