‘கொம்புசீவி’ திரைப்படம் சண்முக பாண்டியன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ளது. சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். புதுமுகம் தார்னிகா, சுஜித் சங்கர், கல்கி, முனீஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முகேஷ் டி. செல்லையாவுடன் இணைந்து ஸ்டார் சினிமாஸ் தயாரிக்கிறது.
தேனி, ஆண்டிபட்டி மற்றும் உசிலம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தப் படம் நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்வில், சண்முக பாண்டியன் குழுவினருக்கு புதிய உடைகள் மற்றும் பிரியாணி வழங்கி கௌரவித்தார்.

சண்முக பாண்டியன் கூறுகையில், “ஏழைகளுக்கு தன்னால் முடிந்ததைச் செய்வதை என் தந்தை விஜயகாந்த் தனது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டார். அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ‘கொம்புசீவி’ படத்தை உருவாக்க கடுமையாக உழைத்த குழுவினருக்கு பரிசாக உணவு மற்றும் உடைகளைப் பகிர்ந்து கொண்டேன்” என்றார்.