சென்னை: அஜித்தை போல் வசீகரமான நபரை என் வாழ்வில் பார்த்ததில்லை என்று நடிகை ரெஜினா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் – இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி. துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் நடித்து வரும் இந்த படத்திற்கான அப்டேட்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியதாக படக்குழு சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் ரெஜினா கசான்ட்ரா விடாமுயற்சி படத்தின் சில அப்டேட்களை கூறினார் அதில் ” திரைப்படம் மிகவும் அழகாகவும், பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு முன் நான் அஜித் சாரை சந்தித்ததில்லை. எல்லோரும் அவரை பார்க்க வேண்டும். அவரைப் போல் வசீகரமான நபரை என் வாழ்வில் பார்த்ததில்லை.
இயக்குனர் மகிழ்திருமேனி சிறப்பாக இயக்கியுள்ளார். 90 சதவீத திரைப்படம் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டுள்ளது. என்னுடைய கதாப்பாத்திரத்தை திரைப்படத்தில் ஆர்வமாக உள்ளேன்” என கூறியுள்ளார்.