மலையாளத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான “நம்மல்” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பாவனா, 15 வயதில் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும்போதே சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். தமிழில், மிஷ்கின் இயக்கத்தில் வெளியான “சித்திரம் பேசுதடி” படத்தின் மூலம் அறிமுகமான பாவனா, “வெயில்”, “தீபாவளி”, “கூடல் நகர்”, “ஆர்யா”, “ராமேஸ்வரம்”, “வாழ்த்துகள்”, “அசல்” போன்ற படங்களில் நடித்தார். “அசல்” படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், பாவனாவுக்கு ஒரு மறக்க முடியாத கசப்பான அனுபவம் ஏற்பட்டது, இதன் காரணமாக அவர் சில ஆண்டுகளுக்கு சினிமாவிலிருந்து விலகினார். 2018 ஆம் ஆண்டு, கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பாவனா, மீண்டும் சினிமாவில் திரும்பினார்.
சமீபத்தில், தனது திருமண வாழ்க்கை மற்றும் தமிழ் சினிமாவில் நடித்த அனுபவங்களை பற்றி, பாவனா யூடியூப் சேனலில் பேட்டியளித்தார். 16 ஆண்டுகளாக தமிழில் நடிக்கவில்லை என்பது குறித்து, தமிழ் சினிமாவில் இருந்த மேனேஜர் ஒருவரின் காரணமாக சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று கூறினார். அவர், “பெரிதாக ஆர்வமில்லை” என்று கூறி, “லொகேஷன் போவது வெக்கேஷன் போவதுபோல ஜாலியாக எடுத்துக் கொண்டு நடித்து வந்தேன். பல பெரிய வாய்ப்புகளை தவற விட்டேன்” என்று சுமூகமாக பகிர்ந்தார்.
பாவனா 2018 ஆம் ஆண்டு நவீனுடன் திருமணம் செய்த பிறகு, சமூக ஊடகங்களில் அவர்கள் புகைப்படங்களை வெளியிடாததால், பொதுவாக அவர்கள் பிரிந்துவிட்டனர் என்றும், விவாகரத்து சம்பவம் என்றும் கருத்துகள் எழுந்து வந்தன. இதைப் பற்றி அவர், “நான் அதிகமாக புகைப்படங்களை வெளியிடவில்லை. என் பைவேஸி முக்கியமானது,” என்றார்.
“புலி” படத்தை தவறவிட்ட பாவனா, அந்த நேரத்தில் பல படங்களை அலட்சியம் காரணமாக தவறவிட்டதாக கூறினார். மேலும், ரவி மோகன்தான் தனக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர் என்றும் அவர் கூறினார்.”வெயில்” மற்றும் “தீபாவளி” படங்கள் என்பது பாவனாவுக்கு மிகவும் பிடித்த படங்களாக அமைந்துள்ளன.