சென்னை : இளம் வயதில் ஆண் ஆண் நண்பர்கள் ஏற்பட்ட துயரம் இன்றளவிலும் எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தி வருகிறது என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், தனது கடந்தகால மோசமான அனுபவங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். சிறு வயதிலேயே அப்பா இறந்ததால், அம்மாவுடன் சேர்ந்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் எனக்கு வந்தது.
இளம் வயதில் ஒருவன் எனக்கு நண்பனாக வந்தான். அவனால் அதிக துன்புறுத்தலுக்கு ஆளானேன். அவன் கொடுத்த வலியால், எனக்கு காதல் வயப்பட இப்போதும் கூட பயமாக இருக்கிறது என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
மனதில் படுவதை தைரியமாக தெரிவிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.