சென்னை: எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் சிம்பு மற்றும் அசின் நடிக்க ஒப்பந்தமாகி பின் டிராப் ஆன படம் ஏசி. இதில் எடுக்கப்பட்ட போட்டோ ஷுட் புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
சிலம்பரசன் நடித்த தம், குத்து, மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வந்தா ராஜாவா தான் வருவேன், இது நம்ம ஆளு, மாநாடு என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் கமல்ஹாசனுடன் தக் லைஃப் என்ற படத்தில் நடித்திருந்தார். சிம்பு கமிட்டான படங்களில் ஒன்று தான் ஏசி. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் சிம்பு மற்றும் அசின் நடிக்க ஒப்பந்தமாகி பின் டிராப் ஆகிவிட்டது.
ஆனால் இந்த படத்தின் போட்டோ ஷுட் சிம்பு மற்றும் அசின் இடம்பெற நடந்துள்ளது, அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.