பிரசாந்த் ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்து சமீபத்தில் வெளியான ‘அந்தகன்’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதில் அவரது நடிப்பும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், சிம்ரனின் அடுத்த படத்தை அவரது கணவர் தீபக் பாஹா தயாரிக்கிறார்.
ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் சார்பில் அவர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘தி லாஸ்ட் ஒன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் நடிகை சிம்ரன் சினிமாவுக்கு வந்து 28 ஆண்டுகள் ஆகிறது.
லோகேஷ் குமார் இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகிறது. ஹாரர் மற்றும் ஃபேன்டஸி வகையை எடுத்துக்கொண்டு, முன்பை விட வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் சிம்ரனின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமையும் என தயாரிப்பு தரப்பு கூறுகிறது. மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.