சென்னை: ராஜேஷ் சூசைராஜ் இயக்கிய ‘செருப்புகள் ஜாக்கிரதை’ என்ற வெப் சீரிஸ் Zee5-ல் வெளியாகியுள்ளது. எஸ் குரூப் சிங்காரவேலன் தயாரிப்பில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர், இந்திரஜித், மாப்ள கணேஷ், உசேன், சபிதா ராய், உடுமலை ரவி, பழனி, செவல் ராம், டாக்டர் பிரபாகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தொடர் தொடர்பான நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜேஷ்.எம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மற்றும் Zee5 கவுசிக் நரசிம்மன், சிங்காரவேலன், ஒளிப்பதிவாளர் கங்காதரன், இசையமைப்பாளர்கள் எல்.வி.முத்து, கணேஷ் மற்றும் கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது சிங்கம்புலி பேசுகையில், ‘செருப்பையும், பிணத்தையும் வைத்து அற்புதமாக கதை எழுதிய எழிச்சூர் அரவிந்தனை வாழ்த்துகிறேன்’ என்றார். ராஜேஷ் சூசைராஜ் பேசுகையில், ‘சிங்கம்புலி படப்பிடிப்பில் ஆதிக்கம் செலுத்துவார் என்றார்கள். அது பொய். பல காட்சிகளுக்கு புது ஐடியா கொடுத்தார். ஐரா அகர்வால் ஒரு கொடூரமான பெண். விவேக் ராஜகோபால் சிறப்பாக நடித்துள்ளார்.