சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ‘மதராஸி’ திரைப்படம் செப்டம்பர் 5 அன்று திரையரங்குகளில் வெளியானது. ரூ.100 கோடிக்கும் மேற்பட்ட பட்ஜெட்டில் உருவான இப்படம், கலவையான விமர்சனங்களையும், சுமார் ரூ.100 கோடி வசூலையும் பெற்றது.
ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில், வித்யூத் ஜம்வால் மற்றும் ஷபீர் கல்லரக்கல் வில்லன்களாக நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். மலையாள நடிகர் பிஜூ மேனனும் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ஆக்ஷன், அடிதடி, எமோஷன் கலந்து உருவாக்கப்பட்டிருந்தாலும், கடைசிப் பகுதியில் நீளமான சண்டைக்காட்சிகள் ரசிகர்களை சற்றே சோர்வடைய வைத்ததாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அதனால், படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது. தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘மதராஸி’ வரும் அக்டோபர் 1 முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஓடிடி மூலம் வெளியாகிறது.
சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி வசந்தின் கேமிஸ்ட்ரி, வில்லன்களின் தீவிரமான நடிப்பு ஆகியவை பாசிட்டிவாக பேசப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைச் சந்தித்த இந்தப் படம் ஓடிடியில் எப்படிப் பெறப்படும் என்பதே ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கும் அடுத்தக் கேள்வியாக உள்ளது.